Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் அல்-பஹாவில் நடைபெறவிருக்கும் சவூதி டொயோட்டா சாம்பியன்ஷிப் மலையேற்ற தொடக்க சுற்று.

அல்-பஹாவில் நடைபெறவிருக்கும் சவூதி டொயோட்டா சாம்பியன்ஷிப் மலையேற்ற தொடக்க சுற்று.

192
0

சவூதி ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு (SAMF), அப்துல் லத்தீஃப் ஜமீல் நிறுவனத்துடன் இணைந்து, ஜூலை 14 மற்றும் 15ல் 2023 சவூதி டொயோட்டா சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஹில் க்ளைம்ப் சாம்பியன்ஷிப்பின் தொடக்க சுற்றை நடத்த
திட்டமிட்டுள்ளதாக SAMF அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிக்கான, இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அல்-பஹா பகுதி இருக்கும்.விளையாட்டு அமைச்சகம் மற்றும் அல்-பஹா மாகாணத்தின் எமிரேட் ஆகியவற்றின் ஒத்துழைப்பால் இதன் வெற்றிகரமான நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகிறது.

பனி கவர்னரேட்டின் , கைரா வனப்பபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் 55 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட உள்ளனர். போட்டியானது 2.8 கிமீ ஓட்டத்தில் தொடர்ந்து தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையே 15 திருப்பங்களுடன், 340மீ உயரத்தில் இறுதிப் புள்ளியில் ஏறித் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

மேலும் போட்டியில் முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு GR 86 MT கார் மற்றும் மொத்த ரியால் 50,000 பண வெகுமதிகள் உட்பட பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பல்வேறு அரசு நிறுவனங்கள், கூட்டாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுடன் இணைந்து, சவூதி ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு, சிறப்பாக நடத்த உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!