ரியாத் நகராட்சி சவூதி தலைநகரின் மையத்தில் உள்ள அல்-நஹ்தா பூங்காவை 112,000 சதுர மீட்டர் பரப்பளவில் புனரமைத்து மேம்படுத்தும் திட்டத்தைத் தெரிவித்துள்ளது.
பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பயனாளர்களுக்குப் பொருத்தமான சூழலை வழங்குவதுடன், பொழுதுபோக்குத் துறையை முன்னேற்றுவது மற்றும் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகளை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டு கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி முதல் கட்டத்தில் 1,700 மீட்டர் நீளமுள்ள பூங்காவின் தெற்குப் பகுதியை மறுசீரமைப்பதும், இரண்டாவது கட்டத்தில் 1,800 மீட்டர் நீளம் கொண்ட வடக்குப் பகுதியை மேம்படுத்துவதும் மேற்கொள்ளப்படும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.
மேலும் பூங்காவில் சுகாதார நடைபாதை, நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீரூற்றுகள் சதுக்கம், கால்பந்து மைதானம், திறந்த கிளப் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என 15 கூறுகளை உள்ளடக்கியதோடு, பார்வையாளர்கள் மிதிவண்டிகளையும் (Cycles) வாடகைக்கு எடுக்க முடியும் என நகராட்சி தெரிவித்துள்ளது.