சவூதி தமிழ் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அல் கோபாரில் நடைபெற்ற கொடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட UIC நிறுவனர் திரு.பதுருதீன் அப்துல் மஜீத் சவூதியில் உள்ள அனைத்து NRI சமூகத்தின் சார்பாக வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் சங்கத்தின் தலைவர் திரு.வெங்கடேசன் அவர்களிடம் வேண்டுகோள் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சிவில் நீதிபதிகள் தேர்வை ஒத்திவைக்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்தவும், தமிழ்நாடு சட்ட நீதிமன்றங்களுக்கு 2018 ஆம் ஆண்டில் 222 பேர் சிவில் நீதிபதிகளாகவும், 2019 ஆம் ஆண்டில் 56 பேரும் TNPSC யால் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதன்பிறகு கடந்த 4ம் தேதி முதல் தேர்வு நடத்தப்படவில்லை என்று கடிதத்தில் வலியுறுத்தினார்.
சமீபத்தில் பதிவுகள் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதிக்குள் முடிவடைகிறது, இதில் 245 பணியிடங்களை நிரப்ப முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களும் தற்போது தேர்வுகள் முடிந்து தேர்வு எழுத முடியாமல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பல தனியார் சட்டக் கல்லூரிகள் தங்கள் முடிவுகளை அறிவித்துள்ளன, மேலும் அவர்கள் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் அந்த வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.இது சமூக நீதிக்கு எதிரானது எனக் கருதி TNPSC சிவில் நீதிபதி தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் எனவும், மேலும் விண்ணப்ப காலத்தைத் தவறாமல் நீட்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நாங்கள் உறுதியாக வலியுறுத்துகிறோம் மேலும் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது, அதிலும் குறிப்பாகச் சிறுமிகள் துன்புறுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன, நீட் தேர்வு என்ற பெயரில் தேர்வாளர்கள் தவறான நடத்தையைக் கண்டிக்கிறோம் எனவும், உடனடியாக இதனை நிறுத்தத் தேவையான பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்து கடிதத்தைச் சவூதி கலாச்சார மையத்தின் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது.