ரியாத் பகுதியில் உள்ள அல்-கர்ஜ் கவர்னரேட்டில், முன்விரோதம் காரணமாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ரியாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களையும் கைது செய்யப்பட்டு சவூதி சைபர் கிரைம் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.