Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் அரபு ஊடக அமைச்சர்கள் சபையின் நிர்வாக அலுவலகத்தின் தலைமையாக சவூதி அரேபியா தேர்வு.

அரபு ஊடக அமைச்சர்கள் சபையின் நிர்வாக அலுவலகத்தின் தலைமையாக சவூதி அரேபியா தேர்வு.

113
0

அரபு ஊடக அமைச்சர்கள் சபையின் 18வது அமர்வில் அதன் நிர்வாக அலுவலகத்தின் தலைமையாகச் சவூதி அரேபியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மொராக்கோவின் ரபாத்தில் நடைபெற்ற அரபு தகவல் அமைச்சர்கள் கவுன்சிலின் 53வது அமர்வின் தொடக்க அமர்வின்போது இந்த வாக்கெடுப்பு நடந்ததும் அங்கு ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-தோசாரி அவர்கள் சவூதியின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

18 வது அவர்வு கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ள பல தலைப்புகளில் விவாதித்தனர், முக்கியமாகக் கூட்டு அரபு ஊடக நடவடிக்கை, ஒத்துழைப்பு அம்சங்கள் மற்றும் ஊடக நிபுணத்துவத்திலிருந்து பயனடைவதற்கான வழிகள், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரபு ஊடக மூலோபாயங்கள் குறித்து விவாதித்தனர்.

நிர்வாக அலுவலகம் அரபு தகவல் அமைச்சர்கள் கவுன்சிலின் பணிகள் மற்றும் ஆயத்த கூட்டங்களை நிர்வகிக்கிறது, அரபு ஊடகங்களுக்கான நிரந்தர குழுவின் பரிந்துரைகளை ஆராய்கிறது மற்றும் அரபு தகவல் அமைச்சர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட முடிவுகளை எடுத்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!