Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் அரபிக்கடலின் வெப்பமண்டல நிலை சவுதி அரேபியாவை பாதிக்காது என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

அரபிக்கடலின் வெப்பமண்டல நிலை சவுதி அரேபியாவை பாதிக்காது என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

185
0

அரேபிய கடலின் வெப்பமண்டல நிலை சவுதி அரேபியாவின் வான்வெளியை பாதிக்காது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்து மேலும் ஆரம்பக் குறிகாட்டிகள் சவூதியின் வான்வெளி வெப்பமண்டல சூழ்நிலையால் நேரடியாகப் பாதிக்கப்படாது என்பதைக் காட்டுகிறது என்றும் மையம் கூறியது.

NCM இன் இந்த அறிக்கையானது, அடுத்த வாரத்தில் அரபிக்கடலில் ஒரு வெப்பமண்டல நிலை உருவாகும் சாத்தியக்கூறுக்கான எண் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது குயிப்பிடத்தக்கது.

மேலும் நிலைமையின் முன்னேற்றங்களை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது, தேவைப்பட்டால், சிறப்பு அறிக்கைகள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று சவுதி செய்தி நிறுவனம் நடத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெப்பமண்டல தட்பவெப்பநிலைகள் வெப்பம், ஈரப்பதம் மற்றும் மழை காலநிலைகள் பெரும்பாலும் Tropic of Cancer and the Tropic of capricorn இடையில் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!