இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த 1,300 யாத்ரீகர்களுக்கு சிறப்புப் பரிந்துரை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லதீஃப் அல்-ஷேக், இவ்வாறு யாத்ரீகர்களை கௌரவிப்பது இரண்டு புனித மசூதிகள் மற்றும் ஹஜ் விருந்தினர்கள் திட்டத்தின் பாதுகாவலரின் ஒரு பகுதியாக இருக்கும்.மேலும் இது இஸ்லாமிய விவகார அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமாகிய முகமது பின் சல்மான் ஆகியோரின் முன்முயற்சியை டாக்டர். அல்-ஷேக் பாராட்டியுள்ளார், இது இஸ்லாமிய சடங்குகளை நிறைவேற்றுவதில் முஸ்லிம்களின் அக்கறையை நிரூபிக்கிறது மற்றும் ஹஜ் எனும் புனித கடமையை நிறைவேற்ற விரும்புவோர்க்கு பேருதவியாக இருக்கிறது.
இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய மக்களுக்குச் சேவை செய்வதில் சவுதி அரேபியா மேற்கொண்டு வரும் முயற்சியையும், உலக மக்களிடையே இஸ்லாமிய ஒற்றுமையின் பிணைப்பை ஆழப்படுத்துவதையும், மன்னர் சல்மானின் வழிகாட்டுதல் உள்ளடக்கி உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் டாக்டர். அல்-ஷேக் கூறும்போது, திட்டத்தின் பொதுச் செயலகத்தின் மூலம், சவூதி அரேபிய தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள மத இணைப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து, இந்தக் கௌரவப்படுத்தபடும் யாத்ரீகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அரச கட்டளையை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து செயற்முறைகளையும் அமைச்சகம் நிறைவு செய்துள்ளது என்றும் கூறினார்.
சவூதி தூதரகங்கள், கூடுதலாக, அவர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.