Home செய்திகள் உலக செய்திகள் அயர்லாந்தின் அதிகாரிகளுடன் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் சந்திப்புகளை நடத்தியுள்ளது.

அயர்லாந்தின் அதிகாரிகளுடன் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் சந்திப்புகளை நடத்தியுள்ளது.

182
0

சர்வதேச உணவு முகமைகள் மன்றத்தின் (IHFAF) 4வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் (SFDA) CEO Dr. Hisham Bin Saad Aljadhey அயர்லாந்து சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

டாக்டர். அல்ஜாதே மற்றும் அவருடன் வந்த பிரதிநிதிகள் நியூசிலாந்து முதன்மை தொழில்துறை அமைச்சகத்தின் (MPI) நியூசிலாந்து உணவுப் பாதுகாப்பு (NZFS) துணை இயக்குநர் ஜெனரல் வின்சென்ட் அர்பக்கிளை சந்தித்தனர்.

உணவுப் பாதுகாப்பு, மற்றும் உணவுக் கழிவுகள் தொடர்பான சவூதியின் முன்னுரிமைகள் குறித்து இரு அமைப்புகளும் விவாதித்தனர். ஆய்வக சோதனை நடைமுறைகள், நுண்ணுயிர் எதிர்ப்பு பற்றிய அறிக்கைகளையும் மதிப்பாய்வு செய்தனர்.

சிங்கப்பூர் உணவு முகமையின் (SFA) தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் டான் லீ கிம்மைச் சந்தித்து புதிய உணவு ஆதாரங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் (FSA) பொதுச் செயலகம் ,ஜேர்மன் ஃபெடரல் நிறுவனம் ஆகியவற்றுடனும் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!