கடந்த முஹர்ரம் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், நீதி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் நகராட்சி, ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் போன்ற ஆறு அமைச்சகங்களின் ஊழியர்கள் உட்பட மொத்தம் 107 பேர் லஞ்சம், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், பணமோசடி செய்தல், மோசடி செய்தல் ஆகிய ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சவூதி அரேபியாவின் கட்டுப்பாடு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (NAZAHA) அறிவித்துள்ளது.
1445 முஹர்ரம் மாதத்தில் பல குற்றவியல் மற்றும் நிர்வாக வழக்குகளைத் தொடங்கிய NAZAHA, 2442 ஆய்வுச் சுற்றுகளை மேற்கொண்டு 260 பேர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அவர்களில், 107 பேரைக் கைது செய்தது, மேலும் இதில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.