சவூதி ஜெட்டாவில் உள்ள SGS இன் தலைமையகத்தில் சவுதி புவியியல் ஆய்வின் (SGS) CEO இன்ஜி.அப்துல்லா அல்-ஷாம்ராணி மற்றும் சீன அணுசக்தி ஆணையத்தின் (CAEA) இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவர் லியு ஜிங் ஆகியோர் அணுசக்தி மற்றும் அணு தொழில்நுட்பத்தை அமைதியான முறையில் பயன்படுத்துதல் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
விவாதத்தில் SGS மற்றும் CAEA அதிகாரிகள் புவி அறிவியல் மற்றும் மாற்று புவி ஆற்றல் துறைகளில் கூட்டாண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அம்சங்களை ஆய்வு செய்து, புவியியல்,அறிவியல் மற்றும் தேசிய புவியியல் தரவுத்தளத்துடன் தொடர்புடைய பல திட்டங்கள் மற்றும் இரு தரப்பினருக்கும் உள்ள திறன்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட்டது.
மைய துளையிடல் மாதிரிகளின் பொறிமுறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கனிம கூறுகளின் வண்ண நிறமாலை படங்கள் ஆகியவற்றைக் காண சீன பிரதிநிதிகள் துளையிடும் நூலகத்திற்கு சென்றதோடு, துளையிடும் மாதிரிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறைகளுடன், தேசிய புவியியல் தரவுத்தளத்துடன் (NGD) இணக்கமான அடிப்படை துளையிடல் தரவுத்தள மேலாண்மை அமைப்பையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
சவூதி அணுசக்தி மற்றும் கதிரியக்க ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சவுதி புவியியல் ஆய்வு அதிகாரிகளுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக,இத்திட்டம் குறித்து விவாதிக்க சீன தூதுக்குழுவினரின் நான்கு நாள் பயணமானது குறிப்பிடத்தக்கது.