ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தௌஃபிக் அல்-ரபியா, ஹிஜ்ரி 1445 (2024) ஹஜ்ஜிற்கான புனிதத் தலங்களில் நாடுகளுக்குக் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு ஒப்பந்தங்களின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விதிகளைப் பூர்த்தி செய்யும் நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஹஜ்ஜிற்கான அனைத்து தயாரிப்புகளையும் முன்கூட்டியே முடிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஹஜ் சீசனுக்கான ஏற்பாடு ஆவணம் ஜூன் 30 வெள்ளிக்கிழமை முதல், ஹஜ் விவகார அலுவலகங்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதில் ஒவ்வொரு நாட்டின் பங்கும் மற்றும் புதிய கால அட்டவணையும் அடங்கும்.
அமைச்சகத்தின் வரலாற்றிலும் ஹஜ் அமைப்புகளின் வரலாற்றிலும் இது போன்ற ஆரம்ப கட்டத்தில் தயாரிப்புகளைத் தொடங்குவது இதுவே முதல் முறையாகும், ஆயத்தக் கூட்டங்கள் அல்-அவ்வல் 11445,செப்டம்பர் 16 அன்று தொடங்கும், அப்போது தரவு உள்ளீட்டிற்காக மின்னணு பாதை திறக்கப்படும், மேலும் உரிமம் பெற்ற நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும். சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்துடன் (GACA) ஒப்பந்தம் செய்து மின்னணு பாதையின் நிதி இலாகாவை செயல்படுத்துவது இதற்குப் பிறகு செய்யப்படும்.
மக்கா, மதீனா மற்றும் புனிதத் தலங்களில் பயணிகளின் தங்குமிட ஒதுக்கீடு செயல்முறை ஷபான் 15, 1445, பிப்ரவரி 25, 2024 இல் செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார். ஒப்பந்தங்களை முன்கூட்டியே முடிக்கக்கூடிய நாடுகள் புனித தலங்களில் பகுதிகளை ஒதுக்குவதில் முன்னுரிமை பெறும்.
ஷபான் 20, 1445,மார்ச் 1, 2024 முதல் விசா வழங்கல் தொடங்கும். மேலும் நாட்டிற்கான பயணிகளின் வருகை துல் கதா 1, 1445 மே 9, 2024 ல் தொடங்கும் என அல்-ரபியா அறிவித்துள்ளார்.
அல்-ரபியா ஹஜ் விவகார அலுவலகங்களின் முயற்சிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கும் அவர்களின் அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்தார். சேவை செய்யச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அனைத்து சவூதி குடிமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.