‘BIG TIME’ என்ற முழக்கத்தின் கீழ் ரியாத் சீசனின் 4 வது பதிப்பு அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகச் சவுதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) இயக்குநர்கள் குழுவின் தலைவர் துர்கி அல்-ஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
சீசனுக்கான புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இணையதளம், தனித்துவமான விவரக்குறிப்புகள் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் தளம், நிகழ்வின் புதிய முத்திரையை அல்-ஷேக் வெளியிட்டார்.
இந்த ஆண்டு சீசனின் தொடக்க விழா மிகப்பெரிய ஹெவிவெயிட் குத்துச்சண்டைகளில் ஒன்றான ரியாத் சீசன் பெல்ட் ஃபைட் தொடக்கத்துடன் 200,000 சதுர மீட்டர் பரப்பளவில், ஒரே நேரத்தில் 40,000 பார்வையாளர்களுக்கு இடமளிக்கும் வகையில், சர்வதேச கலை மற்றும் தொழில்நுட்பத் தரங்களைப் பின்பற்றி 60 நாட்களுக்குள் கட்டப்பட்ட ‘Boulevard Hall’, டிஸ்னியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களான “disney castle”, உண்மையான உலகத்தையும் மெய்நிகர் யதார்த்தத்தையும் இணைக்கும் “House of Hype”, ஜப்பானின் மோச்சாவின் “Cats ‘n Cups”என்ற பூனைப் பிரியர்களுக்கான கஃபே, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அனுபவமான Blippi wonders ஆகியவைகளுடன் தொடங்க உள்ளன.
‘ரியாத் சீசன் கோப்பை’ உலக சாம்பியன் ஜான் செனா பங்கேற்புடன் உலகின் மிகப்பெரிய மல்யுத்த விழாக்களான ‘கிரவுன் ஜூவல்’ மற்றும் உலகின் முதல் தரவரிசையில் உள்ள ஆண் மற்றும் பெண் சாம்பியன்கள் பங்கேற்கும் ‘ரியாத் டென்னிஸ் சீசன் கோப்பை’ போட்டி, ரியாத் பொம்மை விழா (RTF), இன்ஃப்ளூயன்சர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்ஸ் விருதுகள் கண்காட்சி முதலியவை அரங்கேறும்.
மேலும் இது 1,180 கடைகள், 120 உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளுடன் கூடிய மிகப்பெரிய பிரபலமான அரங்குகளை உள்ளடக்கியது.
அரை மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய மொபைல் பொழுதுபோக்கு பூங்காவான ‘Wonder Garden’ரியாத் நகரின் வடக்கே ஒரு புதிய இடத்தில் நான்கு தோட்டங்கள் மற்றும் 85 க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டிருக்கும்.
மேலும் ரியாத் சீசன் 2023 ‘Souk Al-Awalain’,’Riyadh Zoo’,’Al-Suwaidi Park’endra மூன்று புதிய மற்றும் முற்றிலும் இலவச மண்டலங்களை உள்ளடக்கியதோடு 6 மில்லியன் பரிசுத்தொகையுடன், ‘Treasure’ என்ற ஒரு புதிய மற்றும் புதுமையான போட்டி நடத்தவும் திட்டமிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.